Friday 3 September 2021

Case About Meera Mithun

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு.. சிறைவாசம் நீள்கிறது.. ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் இரண்டாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

9ம் தேதி வரை நீட்டிப்பு விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டடு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நீதிமன்ற காவல் வரும் 9 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

மீரா மிதுன் மனு தள்ளுபடி இதற்கிடையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

 20 நாட்களாக சிறை இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி, மீரா மிதுனும், சாம் அபிஷேக்கும் இரண்டாவது முறையாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 20 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலும், தான் பெண் என்பதை கருத்தில் கொண்டும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென மீரா மிதுன் கோரியிருந்தார்

முன்னுரிமை வேண்டாம் இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசுத்தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா, பட்டியலின் மக்களை புண்படுத்தும் வகையில் மீரா மிதுன் பேசி இருப்பது சமுதாயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் பாலின ரீதியான முன்னுரிமை வழங்க கூடாதெனவும்,தற்போது ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என் எதிர்ப்பு தெரிவித்தார்

சாம் அபிஷேக் அதே போல மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் எல்லா வகையிலும் மீரா மிதுனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோக்களை படம் பிடிப்பதும் பதிவேற்றம் செய்வதும் அவர்தான் எனவும் எடுத்துரைத்தார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வகுமார், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வன்கொடுமை வழக்கு முன்னதாக துணை நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசியதால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இது முதல் வழக்கு ஆகும். இந்தவழக்கில் தான் மீரா மிதுன் முதல் முதலாக கைதானர். அதில் தற்போது ஜாமின் கிடைக்கவில்லை.

மிரட்டல் வழக்கு இரண்டாவது வழக்கு : மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எம்.கே.பி.நகர் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். இது அவர் மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்காகும். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இந்த இரண்டாவது வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது

பிரஸ் மீட் மூன்றாவது வழக்கு: ஜோ மைக்கல் பிரவீன் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் பிரஸ் மீட் வைத்தார். அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் காவல்துறையை கடுமையாக விமர்சித்தபோது, பிரஸ் மீட் நடத்த வேண்டாம் என்று ஹோட்டல் நிர்வாகம் மீரா மிதுனிடம் கூறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மீரா மிதுன் ஹோட்டல் மேலாளரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது மூன்றாவது வழக்காகும்

நீதிமன்றத்தில் ஆஜர் இதன் பிறகு ஜோ மைக்கல் பிரவீன், மீரா மிதுன் மீது கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இது மீரா மிதுன் மீது போடப்பட்ட 4-வது வழக்காகும். இந்த கடைசி இரண்டு வழக்கு தொடர்பாகவும் மீரா மிதுனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு வழக்கு தொடர்பாக மீரா மிதுனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

காரணத்தோடு அப்போது மாஜிஸ்திரேட்டுவிடம், '' என் மீது வேண்டுமென்றே எந்த ஒரு காரணமும் இல்லாமல், போலீசார் அடுத்தடுத்து வழக்குகள் போடுகின்றனர். எனக்கு ஜாமீனே கிடைக்க கூடாது என்று செயல்படுகின்றனர். போலீசாரின் டார்ச்சர் என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்னை டார்ச்சர் செய்கின்றனர்'' என்று மீரா மிதுன் கூறினார். இதற்கு பதில் அளித்த மாஜிஸ்திரேட்டு, ''உங்கள் மீது போடப்பட்ட ஒவ்வொரு வழக்குகளும் காரணத்தோடுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்

நீதிபதி உத்தரவு மேலும், மாஜிஸ்திரேட்டு மீரா மிதுனிடம், '' உங்கள் வழக்கறிஞர் எங்கே?'' என்று கேட்டனர். ''மீரா மிதுன் வழக்கறிஞருக்கும், அவரது குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்து விட்டீர்களா'' என்று போலீசாரிடம் மாஜிஸ்திரேட்டு கேட்டார். இதன்பிறகு போலீசார் இருவருக்கும் தகவல் கொடுத்து விட்டனர். இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது கடைசியாக போடப்பட்ட இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஒரு வழக்கில் சிறை மீரா மிதுன் மீது பதியப்பட்டுள்ள மொத்தம் 4 நான்கு வழக்குகளில், 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்து விட்ட போதிலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஏனென்றால் முதன் முதலாக அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவைத்தான் தற்போது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீரா மிதுனும் அவரது ஆண்நண்பரும் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment

Tamilnadu Trending News School Students Are Told To Stay In Home

  பள்ளிக்கு வர வேண்டாம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்! ஹைலைட்ஸ்: 'காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந...